Back
சிற்பம்
முருகன்-வள்ளி திருமணம்
சிற்பத்தின் பெயர் முருகன்-வள்ளி திருமணம்
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை கௌமாரம்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
குறவள்ளியை முருகன் கைத்தலம் பற்றும் காட்சி
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
முருகனுக்கு வள்ளியை மகட்கொடையாக அதாவது கன்னியாதானம் (பாணிக்கிரகம்) செய்து கொடுக்கிறான் வள்ளியின் தந்தை வேடர் குல தலைவன். முருகன் அழகிய இளம் வீரனாய் புன்னகை தவழும் வதனத்துடன் காட்டப்பட்டுள்ளார். மகுடமணிந்து, மணமகன் கோலத்தில் காட்சியளிக்கிறார். நான்கு திருக்கைகளில் பின்னங்கரங்களில் சக்திப்படையும், வஜ்ராயுதமும் கொண்டுள்ளார். வலது முன் கையில் வள்ளியின் வலது கை வைக்கப்பட்டுள்ளது. இடது முன் கையில் மலர்ச் செண்டைப் பிடித்துள்ளார். வேடுவர் தலைவன் தன் கையிலுள்ள கமண்டலத்திலிருந்து நீரை மணமக்களின் கையில் ஊற்றி கன்னிகா தானம் செய்கிறான். வேடர் தலைவன் முறுக்கிய மீசையுடன் வலது தோளில் வைத்துள்ள வில்லுடன் காட்டப்பட்டுள்ளான். வேடனின் காலருகே அவன் மனைவி நிற்கிறாள். அவளுக்கு முன்னே மணப்பெண் வள்ளி நாணத்துடன் நிற்கிறாள். வலது கையை உயர்த்தி மணவாளனின் கைகளின் மேல் வைத்தும், இடது கையை தொடையில் ஊரு முத்திரையில் வைத்தவாறும் மணக்கோலத்தில் நிற்கிறாள். பின்னால் நிற்கும் அவள் தாய் தன் இடது கையால் அவள் தலையைத் தொட்டு ஆசி வழங்குகிறாள். வலது கையால் தன் மகளின இடையை ஆதுரத்துடன் பற்றியுள்ளாள். பெண்கள் இருவரும் ஆண்களின் கால் நீட்டளவே உயரத்துடன் காட்டப்பட்டுள்ளனர். வேடனைத் தவிர மூவரும் கணுக்கால் வரை நீண்ட ஆடையணிந்துள்ளனர். மணமகன் முருகன் மடிப்புகளுடன் கூடிய பட்டாடையை உடுத்தி, இடையில் மேகலை தவழ, மார்பில் முப்புரி நூல் விளங்க, கழுத்தில் சவடியும், இரட்டைவட ஆரமும், செவிகளில் மகர குண்டலங்களும் அணிந்து காட்சியளிக்கிறார். நால்வரும் கைகளில தோள்வளைகள், முன்வளை அணிந்துள்ளனர். முருகன்-வள்ளியின் திருமணத்தை முருகனின் தமையனான கணபதி நடத்தி வைக்கிறார். கீழே அவர் அமர்ந்திருக்கிறார்.
குறிப்புதவிகள்
முருகன்-வள்ளி திருமணம்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 20
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்