சிற்பம்

அரசன் - அரசி
சிற்பத்தின் பெயர் | அரசன் - அரசி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | அரச உருவம் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
தலைவனின் மறுப்பு
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சமண, பௌத்த மதங்கள் உள்ளிட்ட பல நெறிகள் மனிதன் வீடு பேற்றிற்கான தடையாக பெண்களைக் காரணம் காட்டுகின்றன. எனவே சிற்றின்பம், பேரின்பம் என அக வாழ்வியலும், பக்தி நெறியும் இருபாற்பட்டன. இச்சிற்பத்தில் முக்தி நெறி அடைய முனைகிறான் போலும் தலைவன். தடுக்கும் தலைவியை கை விரல் சுட்டி மறுக்கிறான். இல்லற வாழ்வை விடுத்து துறவறம் பூணுதல் நான்காவது கடமையாக மறை நூல்கள் கூறுகின்றன. இல்லறமல்லது நல்லறமன்று எனவும் தமிழ் கூறும் நல்லுலகம் குறிப்பிடுகின்றது. எவரெவர்க்கு எந்நியதி உடன்பட்டதோ அவ்வழி செல்லுதலே வாழ்வில் ஏற்புடைத்து என்ற கருத்தை இச்சிற்பம் விளக்குவதாக உள்ளது. இல்லற இன்பத்திலிருந்து விலகி பக்தி நெறியைப் பின்பற்றி முக்திப் பேற்றை அடைந்ததாகவே சமண தீர்த்தங்கரர்களும், பௌத்த முனிகளும், அடியார்களும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். எனவே இக்கூறு ஓர் அங்கமாக மனிதனால் ஒரு நிலையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |