சிற்பம்

கொடிப்பெண்
சிற்பத்தின் பெயர் | கொடிப்பெண் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
யானைத் தந்தத்தினால் ஆன கொடிப் பெண் சிற்பம்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
விசயநகர கலைப்பாணியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றான கொடிப்பெண் திருவரங்கத்தில் தந்தச் சிற்பமாக உள்ளது. கொடிப் பெண் வலது காலை ஊன்றி, இடது காலை குறுக்காக வைத்து குஞ்சித பாதமாக ஸ்வஸ்திகாசனத்தில் நிற்கிறாள். இடது கையால் உடலைச் சுற்றி வளைந்து செல்லும் கொடியைப் பிடித்தபடியும், வலது கையை வலது தொடையில் வைத்தபடியும். ஒயிலாக, சாய்வாக நிற்கிறாள். கொடிப்பெண்ணின் வலது தோளில் கிளி ஒன்று அமர்ந்துள்ளது. அக்கிளியை நோக்குகிறாள். நீண்ட சடைப்பின்னல் பின்னால் முழங்காலுக்கு கீழே தொங்குகிறது. நேர்வகிட்டின் இருபுறமும் சூரிய, சந்திரஅணிகளும், செவிகளில் செவிப்பூ, தாடங்கம் என்னும் தோடு அணிந்துள்ளாள். கழுத்தில் நீண்ட ஆரமும், அட்டிகையும் அழகு செய்கிறது. முத்தாலான தோள்வளைகளும், முன்வளைகளும், இடையில் மேகலையும் பெண்ணவளின் எழிலைக் கூட்டுகிறது. இடையாடையின் நீண்ட மடிப்புகள் கால்களுக்கிடையே காட்டப்பட்டுள்ளது. கொடியே அலங்கார வளைவாய் அமைய, அதன் நடுவே இப்பெண் நிற்கிறாள்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |