சிற்பம்
உமா சகிதர்
சிற்பத்தின் பெயர் உமா சகிதர்
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
சிவபெருமான் இடதுபுறம் உமையம்மையுடன் நின்றபடி காட்சியளிக்கும் கோலம்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
சிவபெருமான் தன் அருகில் நிற்கும் உமையாளை இடையில் அணைத்தபடி, அவள் மார்பைத் தொடுகிறார். இல்லற இணைவின் வாழ்வியல் நிகழ்வுகளில் இதுவும் ஒரு காட்சியாகும். உமா தேவி நாணத்துடன் நிற்கிறாள். உமாசகிதர் நான்கு கரங்கள் பெற்றுள்ளார். முன்னிரு கரங்கள் பெண்மையுடன் ஆனந்தக் கூத்திடுகின்றன. பின்னிரு கரங்களில் இருப்பது மான் மழுவாயிருக்கலாம். ஜடாமகுடராய், நீள் செவிகளில் மகர, பத்ர குண்டலங்கள் அணிந்தவராய், கழுத்து, கை, கால்களில் அணிகலன்கள் பெற்றவராய் விளங்கும் உமாசகிதர் கணுக்கால் வரையிலான நீண்ட ஆடை உடுத்தியுள்ளார். தன் தலைவனை அருகில் நெருங்கி இணக்கமுடன் நிற்கும் உமையாள் வலது கரத்தில் மலரினைப் பிடித்துள்ளாள். இடது கை தளிர்க்கரமாக நீண்டு தொங்குகிறது. தேவி சமபாதத்தில் நிற்கிறாள். உமையவளுக்கும் மகுடமும், பிறவணிகளும் அணி செய்கின்றன. இடையில் மேகலையும், நீண்ட ஆடையும் அணிந்துள்ளாள். மானுட வாழ்வில் ஆண் பெண் உறவின் உன்னதத்தை விளக்க கலைப்படைப்புகள் காலத்தின் கட்டாயமாகின்றன. கண்டேன் கண்டறியாதன கண்டேன் என்று அப்பரின் வரிகள் உயிர்க்கூட்டங்களின் இது போன்ற காட்சிகளை திருவையாற்றின் வழிநடையில் கண்டதினால் தான் போலும். முற்றுந்துறந்தவர்க்கே முக்திக்கு முன்னர் இக்காட்சியைக் காட்டி, வாழ்வெதுவென்று விளக்கிய இறைவன் தானே அக்காட்சியுமாய் நிற்கிறார்.
குறிப்புதவிகள்
உமா சகிதர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 17
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்