சிற்பம்

அப்சரஸ்
சிற்பத்தின் பெயர் | அப்சரஸ் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வாழ்வியல் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
பெண்களில் பேரழகியாகத் திகழும் எழில் நங்கை
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
எழில் மிகு தோற்றத்துடன் இளம் நங்கையாக விளங்கும் இப்பெண், நடக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளாள். மூன்று நிலைகளில் அவள் உடல் காட்டப்பட்டுள்ளது. இது சிற்பியின் கலை நயமாகும். இப்பெண் இடது கையில் வைத்திருப்பது மதுக்குடுவை போன்று உள்ளது. இடையிலிருந்து நழுவும் தனது இடைக்கட்டினை வலது கையால் பிடிக்கிறாள். முகம் நாணத்தோடு திரும்பியுள்ளது. இடைக்கட்டின் முடிச்சு வலது காலருகே தொங்குகின்றது. தலையலங்காரமாக கொண்டையும், செவிகளில் செவிப்பூக்களும், தாடங்கம் என்னும் பெரிய தோடுகளும், கழுத்தில் பதக்கத்துடன் கூடிய பொன்னாலான முறுக்கணியும், கைகளில் தோள் வளைகளும், கால்களில் சிலம்புகளும் கொண்டுள்ளார். தலைவனுடன் காதல் லீலை புரிவாள் போல் தோன்றுகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |