சிற்பம்
விறலி
சிற்பத்தின் பெயர் விறலி
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வாழ்வியல்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
மன்னனின் வெற்றிக்காக பாடும் விறலி - பெண் இசைக் கலைஞர்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
விறலியர் என்போர் பாணர்களின் கூட்டத்தில் இடம் பெறுபவர்கள். எனவே விறலி பாண்மகள் எனப்படுவாள். விறலியர் பாணர்களுடன் இசைக்கருவிகளோடு செல்வர். பண்ணிசைக்கேற்ப பாடுவர். இவர்கள் அக உணர்வுகளைப் புறத்தே வெளிப்படுத்திக் காட்டுவதில் விறல்பட (திறம்பட) நடிக்கும் ஆற்றல் உடையவர்கள். விறலியர் தலைவன், மன்னனின் வெற்றிக்காக இசைத்துப் பாடுவர். தலைவனின் வெற்றி, புகழ், கொடை, மரபு ஆகியவை குறித்துப் பாடுவர். சங்க இலக்கியங்களில் விறலியர் பலவிடங்களில் குறிக்கப்பட்டுள்ளனர். திருவரங்கம் கோயில் தேவஸ்தானத்தின் அருங்காட்சியகத்தில் உள்ள இந்த பெண் இசைக் கலைஞர் சிற்பம், விறலியின் தோற்றத்தில் அமைந்துள்ளது. வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு ஆசனத்தில் அமர்ந்துள்ள விறலி இரு கைகளிலும் வீணையைப் பிடித்தவாறு இட மார்போடு சாய்த்து மீட்டுகிறாள். அளகசூடகம் என்னும் தலைக்கோலத்தினைக் கொண்ட இம்மங்கை இசையில் தேர்ந்தவளாய் இருக்க வேண்டும். செவிகளில் செவிப்பூக்கள்,, வளையம், கழுத்தில் பதக்கத்துடன் கூடிய அட்டிகை, கைகளில் தோள் வளைகள், முன் வளைகள் ஆகியன அணிந்துள்ளாள். கணுக்கால் வரையிலான நீண்ட முழாடை அணிந்துள்ள இப்பெண் இசைக் கலைஞர் இளமையுடன் கூடிய எழில்மிகு தோற்றத்தைக் கொண்டுள்ளாள்.
குறிப்புதவிகள்
விறலி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 22
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்