சிற்பம்
பிட்சாடனர்
சிற்பத்தின் பெயர் பிட்சாடனர்
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
தாருகாவனத்து முனிவர்களின் ஆணவ மலத்தை அழிக்க வந்த சிவபெருமானின் பிட்சாடனர் திருக்கோலம்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
பிட்சாடனரின் படிமக்கலைக் கூறுகள் காசியப சில்பசாஸ்திரம், சகளாதிகாரம், ஸ்ரீதத்துவநிதி அம்சுமத்பேதாகமம், காமிகம், காரணாகமம், சில்ப ரத்தினம் ஆகியவற்றில் விளக்கப்பட்டுள்ளன. அம்சுமத்பேதாகமம், இவரைப் பிரம்மனையும், விஸ்வக்சேனரையும் (விஷ்ணுவின் அம்சம்) கொன்றவர் என்று கூறுகிறது. விஸ்வக்சேனரின் எலும்புகளைக் கோர்த்து தோளில் சார்த்தியவாறு ஸ்தானக நிலையில் வலது கால் முன்னோக்கி இருப்பது போல அமைந்திருப்பார். குறங்கணி நாதர் கோயில் கருவறை விமானத்தின் கோட்டத்தில் பிச்சாடனர் நின்ற நிலையில் உள்ளார். பிச்சாடனர் நடுவில் முகப்பும் நெற்றிப் பட்டையும் கூடிய ஜடாமகுடராய், நீள்காதுகளில் மகரகுண்டலம், பனையோலைச் சுருள் விளங்க, கழுத்தணிகளாய் கண்டிகை, சவடி அழகு செய்ய, கையில் தோள்வளை, முன்வளைகள் அணிந்தவராய், வயிற்றில் உதர பந்தம், மார்பில் பிரம்ம முடிச் சுடன் கூடிய யக்ஞோபவிதம் துலங்க, ஆடையின்றி இடுப்பில் நாகத்தை சுற்றி வளைத்துக் கட்டியவராய், கால்களில் செருப்பு அணிந்து கொண்டு, இடதுகாலை நன்கு ஊன்றி, வலதுகாலை சற்று முன்னோக்கி வைத்து (வலது கால் சிதைந்துள்ளது) நடக்கும் பாவனையில் காட்டப்பட்டுள்ளார். மிகவும் இளையராய், எழில் தவழும் முகத்தினராய், வனப்பு மிகுந்த மேனியராய் விளங்கும் நக்கன் நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். மூன்று கைகள் சிதைந்துள்ளன. முன் வலக்கையால் மானுக்கு உணவூட்டலாம். முன் இடது கையால் நீண்ட எலும்பினை அணைத்தவாறு தோளில் சாய்த்துள்ளார். இடதுபுறம் பூதகணம் ஒன்று அவரோடு நடக்கிறது. பூதகணம் அரையாடை அணிந்து நெற்றிப்பட்டையுடன் கூடிய மகுடம் தரித்துள்ளது. மேலும் காதுகளில் வளையங்கள் கை, கால்களில் அணிகள் கொண்டிருக்கிறது. வயிற்றை பிளந்து காட்டுகிறது. பிச்சை கேட்க பாத்திரம் ஏதும் கொள்ளாமல் தன் வயிற்றையே வாய் போல் பிளந்து காட்டி, உணவிடக் கோருதல் அதன் அகோரப் பசியைக் காட்டுவதோடு, சிற்பத்தின் புதுமைத் தன்மையையும் காட்டுகிறது.
குறிப்புதவிகள்
பிட்சாடனர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்