சிற்பம்

முகலிங்கம்
சிற்பத்தின் பெயர் | முகலிங்கம் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
சிவலிங்கத்தில் முகத்தோடு அமைக்கப்படும் இலிங்கம் முகலிங்கம்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இலிங்கத்தில் முகமிருந்தால் அதனை முகலிங்கம் என்பர். முகலிங்கம் நான்கு வகைப்படும். ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பன அவையாகும். ஆட்யம் 1001 இலிங்கமுடையது. சுரேட்டியம் 108 இலிங்க முகங்களைக் கொண்டது. பிரம்ம, விஷ்ணு, ருத்ர, மகேஸ்வர, சதாசிவமே முகலிங்கம் எனப்படுகிறது. இந்த ஐவரும் அண்டத்தில் ஐந்தொழில்களை நடத்துகின்றவர்கள். எனவே முகலிங்கத்தை வணங்கினால் ஐம்பெரும் தேவர்களின் அருளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. இச்சிற்பத்தில் மரத்தின் அடியில் முகலிங்கம் ஒன்று கோயில் போன்ற அமைப்புடைய மாடத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது. முகலிங்கம் தாமரைப் பீடத்தோடு கூடிய ஆவுடையாரைப் பெற்றுள்ளது. இலிங்கத்தின் மேல் மலர் மாலை அணிவிக்கப் பெற்றுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |