சிற்பம்
மாணிக்க வாசகரும், அரிமர்த்தன பாண்டிய மன்னனும்
| சிற்பத்தின் பெயர் | மாணிக்க வாசகரும், அரிமர்த்தன பாண்டிய மன்னனும் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
| ஊர் | திருவரங்கம் |
| வட்டம் | திருவரங்கம் |
| மாவட்டம் | திருச்சி |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | தந்தம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
|
விளக்கம்
அரிமர்த்தன பாண்டியன் தன் அமைச்சரான மாணிக்க வாசகரை குதிரை வாங்க அனுப்பிய காட்சி
|
|
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் ஆமாத்திய பிராமண குலத்தில் சம்புபாதாசிரியர் - சிவஞானவதி என்னும் பெற்றோர்களுக்கு அருமகவாக அவதரித்தார். இயற்பெயர் திருவாதவூரர். இவர் அரிமர்த்தன பாண்டியன் அவையில் ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டம் வழங்கப் பெற்று முதல் அமைச்சராக விளங்கினார். அரிமர்த்தன பாண்டியன் அரசின் குதிரைப்படைக்காக குதிரைகள் வாங்கக் கருதி, அதற்கு தன் முதல் அமைச்சரை பணித்தான். மன்னன் அளித்த பொருளை மாணிக்கவாசகர் குதிரை வாங்கப் பயன்கொள்ளாது திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) திருக்கோயில் திருப்பணிக்குச் செலவிட்டார். சிவபெருமான் குருவடிவம் காட்டி இவரைக் குருந்த மர நிழலில் ஆட்கொண்டான். அக்காலை இவர் பாடிய பனுவல்களே திருவாசகம். இறைவன் இவருக்கு மாணிக்கவாசகர் என்னும் திருநாமம் சூட்டினார். அரிமர்த்தன பாண்டியனும், மாணிக்க வாசகரும் இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளனர். குதிரை ஒன்று உருவகமாகக் காட்டப்பட்டு திருவாதவூரார் மாணிக்கவாசகர் ஆன கதையை நமக்கு விளக்குகிறது. மாணிக்கவாசகர் சிவனடியாராக உருத்திராக்க மாலைகளுடன் விளங்குகிறார். பாண்டிய மன்னன் மகுடம், பட்டாடை, ஆபரணங்களுடன் விளங்குகிறான். மன்னர் மீசையுடன் உள்ளார். இச்சிற்பத் தொகுதி அலங்கார கட்டமைப்பில் காட்டப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 28 |
| பிடித்தவை | 0 |