Back
சிற்பம்
இராம-இலக்குவன் மற்றும் அனுமன்
சிற்பத்தின் பெயர் இராம-இலக்குவன் மற்றும் அனுமன்
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
சொல்லின் செல்வன் அனுமனை அணைத்தபடி இராமரும், பின்னால் வணங்கி நிற்கும் இலக்குவனும்ஷ
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இச்சிற்பம் முப்பரிமாணத்தில் அமைக்கப்பட்டதாகும். இராமன் அனுமனை வலது கையால் அணைத்தபடி, இடது கையால் ஆதுரமாகப் பற்றியுள்ளார். இலக்குவன் இராமனின் பின்னே கைகளைக் கூப்பி வணங்கியபடி நின்றுள்ளார். தமையர்கள் இருவரும் வில்லினை தமது இடது தோளில் சார்த்தியுள்ளனர். அம்பறாத்தூணி வலது புறம் முதுகின் பின்னே காடடப்பட்டுள்ளது. இருவரும் கிரீடமகுடம் தரித்து, முத்தாலான அணிகலன்களை அணிந்துள்ளனர். கணுக்கால் வரையிலான நீண்ட ஆடையை உடுத்தியுள்ளனர். அனுமனின் முகம் தெரியவில்லை. ஏதோ ஒரு பொருளை இரு கைகளிலும் பிடித்து முகத்தின் முன்னே வைத்துள்ளார். இன்னதென்று அறியக்கூட வில்லை. அனுமன் செவிகளில் சங்கக் குழைகளும், இடையில் அரையாடையும், கால்களில் பாதகடகமும் அணிந்து காணப்படுகிறார்.
குறிப்புதவிகள்
இராம-இலக்குவன் மற்றும் அனுமன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்