சிற்பம்

சனகாதி முனிவர்கள்
சிற்பத்தின் பெயர் | சனகாதி முனிவர்கள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
பிரம்மனின் மானசீக புத்திரர்களாகிய சனக, சனகாதி, சனந்தன, சனத் குமார முனிவர்களில் இருவர்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சனகாதி முனிவர்கள் அல்லது பிரம்ம குமாரர்கள் என்பவர்கள் பூமியில் உயிர்க்குலம் பெருகுவதற்காக, பிரம்மாவின் மனதால் படைக்கப்பட்ட நான்கு ஆண் குழந்தைகள் ஆவர். யோக நிலையில் சின்முத்திரை காட்டி அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தியிடம், சனகாதி முனிவர்கள், பரம்பொருள் ஞானத்தை மெளனமாக அறிந்தவர்கள். பரம்பொருளை அடைய குரு உபதேசம் பெற வேண்டியதன் முக்கியத்துவத்தை இறைவனே சனகாதி முனிவர்களுக்காக தட்சிணா மூர்த்தியாக அமர்ந்து ஞானபோதேசம் அருளினார். இம்முனிவர்கள் நால்வரும் பொதுவாக தட்சிணாமூர்த்தி சிற்பத்தின் காலருகே இருபுறமும் இருவராகக் காட்டப்படுவர். அந்நால்வரில் இருவரின் சிற்பம் மட்டும் இங்குள்ளது. இரு முனிவர்களும் ஒருவர் பின் ஒருவராக தாங்குதளத்தின் மீது, அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்துள்ளனர். உச்சிக் கொண்டை முனிவர்களுக்கேயுரிய ஜடாபந்தமாக விளங்குகிறது. முகத்தில் தாடி, மீசையுடன் விளங்கும் இம்முனிவர்கள் உருத்திராக்கத்திலான மாலைகளை கழுத்திலும், கைகளில் வளைகளாகவும் அணிந்துள்ளனர். நீள் செவிகள் கொண்டுள்ள முனிபுங்கவர்கள் இறைவனின் அறவுரையை கூர்ந்து கேட்பவராய், கண்களை மூடி, இலயத்தில் நின்று, கைகளில் முத்திரை காட்டுகின்றனர்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 18 |
பிடித்தவை | 0 |