சிற்பம்
அரசன் - அரசி
| சிற்பத்தின் பெயர் | அரசன் - அரசி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
| ஊர் | திருவரங்கம் |
| வட்டம் | திருவரங்கம் |
| மாவட்டம் | திருச்சி |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | அரச உருவம் |
| ஆக்கப்பொருள் | தந்தம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
|
விளக்கம்
அரசனும் அவன் தேவியும் இன்பம் துய்த்திருக்கும் நிலை
|
|
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
தலைவனும் தலைவியும் காதலாகி கசிந்து காம நிலையில் காட்டப்பட்டுள்ளனர். கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன என தலைவன் அவளை நோக்குகிறான். பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என வியக்கிறான். அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகிர்ந்து கொடுத்து உண்டாற் போன்றது என்று பலவாறு எண்ணிக் கொண்ட தலைவன் திருக்குறளின் காமத்துப் பாலை நன்கு கற்றவன் போலும்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 72 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |