சிற்பம்

இலிங்கம்
சிற்பத்தின் பெயர் | இலிங்கம் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
சிவபெருமானின் அருவுருவ நிலைத் தோற்றமாகிய இலிங்க வடிவம்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இலிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் பெற்றதாக சைவ ஆகமங்கள் கூறுகின்றன. இலிங்கம் என்பது ஒரு குறியீடு. அதன் வடிவமே இதில் குறிப்பிடத்தக்கது. இலிங்க வழிபாடு தொல்குடி மக்களின் தூண் வழிபாட்டிலிருந்து வந்ததாகவும் கருத இடமுண்டு. தமிழ்க் குடிகளின் கந்து வழிபாடு இலிங்க வழிபாட்டினையே குறிக்கிறது எனலாம். வளமை வேண்டி, தாந்திரீக சடங்குகள் சமூகத்தில் மிகுதி பெற்ற போது ஆண் குறி வடிவில் இலிங்கம் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டது. தொல் பழங்காலத்தில் தொல் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளில் ஒன்றான கைக்கோடரியே இத்தோற்றம் பெற்றதாக தொல்லியல் ஆய்வாளர் மகோச தம் ஆய்வில் கூறுகிறார். மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் தொல்பழங்கால கற்கருவிகளில் மிகவும் பயனுள்ளதான, மிகுந்தும் கிடைக்கின்றதுமான கைக்கோடரி நிலத்தில் ஊன்றப்பட்டு இன்றும் மக்களால் வழிபடப்படுகிறது. இக்கோடரிகளின் வடிவங்களை நோக்குகையில் அவை இலிங்கத்தைப் போன்றே காட்சியளிக்கின்றன. மேலும் முருக வழிபாட்டில் முருகனின் போர்க்கருவியான வேலே முதலிடம் பெறுகிறது. மேலும் பரதவர்கள் வஜ்ரப்படை அமைப்புள்ள மீனின் முள்ளை நெய்தல் நிலத்தில் நட்டு வழிபட்டனர் என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. எனவே தொல்பழங்காலத்திலும், வீரயுக காலத்திலும் மனிதர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பொருட்களே வழிபாட்டிற்கு உரியனவாக இருந்திருத்தல் வேண்டும் என்பது உறுதியாகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |