சிற்பம்

சாமரப் பெண்
சிற்பத்தின் பெயர் | சாமரப் பெண் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வாழ்வியல் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
சாமரம் வீசும் இளம் நங்கை
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
எழில் மிகு தோற்றத்துடன் இளம் நங்கையாக விளங்கும் இப்பெண், தன் இரு கைகளிலும் சாமரத்தைப் பிடித்துள்ளாள். சாமரம் என்பது கடவுளுக்கும், மனிதரில் உயர்ந்த சான்றோர்க்கும், அரசர்க்கும் வீசுவதாகும். பண்டைய காலத்தில் செல்வ வளம் படைத்தோரும் சாமரம் வீசுவதற்கு பணியமர்த்தியுள்ளனர். சாமரம் வீசுவது என்பது 16 வகை பூசனைகளில் ஒன்றாகும். கணபதியின் இருபுறத்திலும் சாமரங்கள் காட்டப்படும். சமண தீர்த்தங்கரங்களின் இருபுறமும் சாமரம் வீசும் ஆடவர் சிற்பங்களில் காட்டப்படுவர். கடவுள் படிமங்கள் பலவற்றில் சாமரப் பணியர் மேற்புறத்தில் காட்டப்படுவது மரபு. இச்சிற்பத்தில் சாமரப்பெண் நீண்ட பின்னல் சடையுடன் விளங்குகிறாள். தலையின் நேர்வகிட்டில் தொய்யகமும், காதுகளில் வளையங்களும், கழுத்தில் நீண்ட ஆரமும், அட்டிகையும், கைகளில் தோள் வளை, முன் வளை ஆகிய அணிகளும் விளங்குகின்றன. முன்புறம் விசிறி மடிப்புடன் கூடிய ஆடல் மகளிருக்கான ஆடையணிந்துள்ளாள். 108 ஆடல் கரணத்தின் ஒரு வகையில் நின்றுள்ளாள்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |