சிற்பம்

இராமன்-விசுவாமித்திரர்
சிற்பத்தின் பெயர் | இராமன்-விசுவாமித்திரர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
விசுவாமித்திரருடன் செல்லும் இராமன்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
விசுவாமித்திர முனிவரின் பின்னே இராமன் பணிவோடு வணங்கி நிற்கிறான். முனிவர் இராமனுக்கு அறவுரை ஒன்றைக் கூறுவது போல அவரின் வலது கை முத்திரை அமைந்துள்ளது. இராமன் அக்கூற்றை பணிந்து கேட்கிறான். ஜடாபந்தம் தலைக்கோலமாய் கொண்டு, தாடி, மீசையுடன் விளங்கும் விசுவாமித்திரர் கழுத்திலும், கைகளிலும் முத்து அல்லது உருத்திராக்கத்தினால் ஆன அணிகளை அணிந்துள்ளார். இடது கையில் நீர் கரகத்தைக் கொண்டுள்ளார். கணுக்கால் வரையிலான நீண்ட நூலாடை அணிந்துள்ளார். கால்களில் பரல்களைப் பெற்ற பாதகடகம் விளங்குகின்றது. இராமனும் முனிவரைப் போலவே ஆடை அணிகளைப் பெற்றுள்ளான். இராமனுக்கு கிரீட மகுடம் தலையணியாக விளங்குகிறது. இடது மார்போடு வில்லினை அணைத்தபடி, தலையை சற்று தாழ்த்தி பணிவோடு கை குவிக்கிறான். இக்காட்சி விசுவாமித்திரர் இராமனை தன் வேள்வியை காக்கும் பொருட்டு கானகம் அழைத்துச் செல்லும் காட்சியாக இருக்கலாம்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |