Back
சிற்பம்
ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி
சிற்பத்தின் பெயர் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
அண்டமுற நிமிர்ந்தாடும் ஊர்த்துவ தாண்டவம் (ஒற்றைக்காலை உயரேத் தூக்கி ஆடும் நடனம்)
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
ஒற்றைக் காலை உயரேத் தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடும் சிவபெருமானார் வலது காலை உயர்த்தியுள்ளார். குப்புற விழுந்திருக்கும் முயலகன் மீது இடது காலை ஊன்றியுள்ளார். பத்துத் திருக்கைகள் கொண்டுள்ளார். முன் வலது கை தூக்கிய காலை வளைத்து அணைத்தபடி அபய முத்திரை காட்டுகிறது. மான், மழு, உடுக்கை, பாசம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகியனவற்றை பிற கைகளில் கொண்டுள்ளார்.ஜடாமகுடம் அணிந்துள்ள ஊர்த்துவரின் உடல் சமநிலையில் நிற்கிறது. ஆடலுக்கேற்றவாறு உடலின் நெகிழ்வுகள் காட்டப்பட்டுள்ளன. மார்பில் கண்டிகை, மணியாரம் அணிந்துள்ளார். கைகளில் தோள்வளை, முன்வளை, கடகவளை அணிந்து, அரையாடை உடுத்தி, இடையாடையின் முடிச்சுகள் இடதுபுறம் பறந்த நிலையில் ஆடுகின்றார். ஆடல்வல்லானின் வலதுபுறம் காலருகே நான்முகன் தாளம் கொட்டுகிறார். அவருக்கு அருகில் சிறிய உருவமாக அதிகார நந்தி வணங்கியபடி நிற்கிறார். உமையாள் இவ்வாடலைக் காண்கிறாள். உமைக்கு வலது புறம் அரைமண்டியிட்டு பணிந்து அமர்ந்த நிலையில் உள்ளவர் பிருங்கி முனிவராய் இருக்கலாம். திருமால் ஊர்த்துவரின் இடது காலருகே நின்று கொண்டு மத்தளம் இசைக்கிறார்.
குறிப்புதவிகள்
ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்