சிற்பம்
அரசன் - அரசி
| சிற்பத்தின் பெயர் | அரசன் - அரசி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
| ஊர் | திருவரங்கம் |
| வட்டம் | திருவரங்கம் |
| மாவட்டம் | திருச்சி |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | அரச உருவம் |
| ஆக்கப்பொருள் | தந்தம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
|
விளக்கம்
அரசன் தன் தேவியுடன் நிற்கும் காட்சி
|
|
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
அரசன் தன் தேவியை கழுத்தோடு இழுத்துப் பிடித்து அணைத்துள்ளான். அகன்ற மார்பும், பருத்த வயிறும் கொண்ட நெடிய தோற்றத்தினை உடையவனாய் விளங்கும் மன்னன் தலைக் கோலமாய் குந்தளக் கொண்டையைக் கொண்டுள்ளான். காதுகளில் முத்தணிகளும், கழுத்தில் நீண்ட மணியாரமும், அட்டிகையும் அணிந்துள்ளான். கால்களில் பாதுகை அணிந்து நிற்கும் தலைமகன் கணுக்கால் வரையிலான நீண்ட வேட்டியை இரு கால்களுக்கு குறுக்கே மடித்துக் கட்டியுள்ளான். அரசனின் தேவி தலைவனின் இழுத்த பிடியில் ஒடுங்கியவளாய் நிற்கிறாள். கணுக்கால் வரை நீண்ட ஆடையும், பிறவணிகளும் அணிந்துள்ளாள். இருவரும் நோக்குவதென்ன?
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 141 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |