சிற்பம்
காளி
| சிற்பத்தின் பெயர் | காளி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
| ஊர் | திருவரங்கம் |
| வட்டம் | திருவரங்கம் |
| மாவட்டம் | திருச்சி |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | சாக்தம் |
| ஆக்கப்பொருள் | தந்தம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
|
விளக்கம்
காளியின் ஆடல்
|
|
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
காளி ஆடற்கலையில் சிறந்தவள். காளியின் பெயரால் காளீயம் என்னும் நடன நூலை இயற்றப்பட்டதாகவும் கூறுவர். நடனத்தில் தமக்கு நிகர் ஒருவரும் இலர் என்று காளி இறுமாந்திருக்க, அதனை அறிந்த சிவபெருமான் அவருடன் நடனம் செய்து ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இச்சிற்பத்தில் ஐயிரு கரங்களில் முத்தலை சூலம், சங்கு, சக்கரம், மணி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியபடி, கோரைப் பற்களுடன் காளி காட்டப்பட்டுள்ளாள். கால்களில் பாதரட்சைகளை அணிந்துள்ள தேவியின் இடது புறத்தில் குரங்கு முகம் கொண்ட ஒருவர் குடமுழவினை இசைக்கிறார். வலதுபக்கம் நிற்பவர் தாளம் கொட்டுகிறார். கணுக்கால் வரையிலான நீண்ட ஆடையணிந்துள்ள தேவி கால்களில் சிலம்பும், இடையில் முத்தாலான மேகலையும், கழுத்தில் மணியாரமும், முத்து மாலையும், முத்துவடங்களாக விளங்கும் தோள் மாலைகளும் அணிந்துள்ளாள். கைகளில் தோள்வளைகள், முன்வளைகள் காட்டப்பட்டுள்ளன. மார்பில் அணிந்துள்ள குஜபந்தம் எனப்படும் மார்புக் கச்சை முத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.காளி தேவி தலையை ஒருபுறமாக சாய்த்து, வலது முன் கையை காட்டுகிறாள். ஆடலில் தோற்றதால் ஏற்பட்ட முகக்குறிப்பு இதுவாய் இருக்கலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 26 |
| பிடித்தவை | 0 |