சிற்பம்
வீரன்
சிற்பத்தின் பெயர் வீரன்
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வாழ்வியல்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
யானைத் தந்தத்தினால் ஆன வீரன் சிற்பம்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
திருவரங்கம் கோயிலில் உள்ள தந்தத்தினாலான சிற்பங்களில் ஒன்றான இச்சிற்பம் வீரன் உருவமாகும். இச்சிற்பத்தில் வீரன் இடது தோளில் வில்லினை மாட்டியுள்ளான். வலது கையில் கூர் வாளை ஓங்கியவாறு பிடித்துள்ளான். தொங்கும் மீசையுடன் காணப்படும் இவ்வீரன் அரைக்காற் சட்டை அணிந்துள்ளான். செவி, கை, கால்களில் ஆபரணங்கள் அணிந்துள்ளான். வீரன் இயக்க நிலையில் காட்டப்பட்டுள்ளான். அருகில் ஒரு பெண் நிற்கிறாள். அவள் வீரனின் இல்லாளாக இருக்க வேண்டும். இருவரில் வீரனின் உருவம் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
வீரன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்