சிற்பம்

வேட்டுவர் தலைவன்
சிற்பத்தின் பெயர் | வேட்டுவர் தலைவன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வாழ்வியல் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
ஓங்கி உயர்ந்த தோற்றத்துடன் வீரனாய் நிற்கும் வேடர் குலத் தலைவன்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
வேடர் குலத் தலைவன் வேட்டையில் சிறந்தவன் போலும். அவன் தோளில் வேட்டையாடப்பட்ட மான் போடப்பட்டுள்ளது. வலது கையில் நீண்ட வில்லினைப் பிடித்து ஊன்றியுள்ளான். அவன் வலது காலருகே நாய் ஒன்று அமர்ந்துள்ளது. வேடனின் நண்பனல்லவா நாய். தன் தலைவனை ஏறிட்டு நோக்குகிறது. வேடர் தலைவனின் வலது காலில் முள் தைத்து விட்டது போலும். அம்முள்ளினை அகற்றும் பணியில் ஒரு வேடன் ஈடுபட்டுள்ளான். இடது காலை ஊன்றி, வலது காலை மடக்கி ஏக பாதத்தில் நின்றுள்ள வேடர் தலைவன், உடலை சமநிலைப்படுத்தி நிற்கிறான். தழையாடை உடுத்தியுள்ளான். முறுக்கிய மீசையும், வெருட்டிய விழிகளும் கொண்டவனாய், நீள் செவிகள் உடையவனாய் விளங்கும் வீரனுக்கு தலையில் உச்சிக் கொண்டைக் காட்டப்பட்டுள்ளது. கழுத்து, கைகள், கால்கள் ஆகியவற்றில் மணிகளால் ஆன அணிகள் அழகு செய்கின்றன. தன் தலைவனின் காலில் தைத்த முள்ளை அகற்றும் வேடனும் தழையாடை அணிந்துள்ளான். தலைவனின் வலது பாதத்தை தன் உள்ளங்கையில் தாங்கி, இடது கையில் உள்ள ஒரு கருவியால் முள்ளை நீக்குகிறான்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |