சிற்பம்
இரதி-மன்மதன்
சிற்பத்தின் பெயர் இரதி-மன்மதன்
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
காமவேளாகிய மன்மதனும், அழகின் தேவதையான இரதியும்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
காமவேளாகிய மதன் யோகத்தில் உள்ள சிவபெருமானை நோக்கி மலர்க்கணையைத் தொடுக்கிறான். மன்மதனின் இச்செயல் விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை முன்னமே உணர்ந்த இரதி அவனைத் தடுக்கிறாள். இச்சிற்பம் பக்கவாட்டுத் தோற்றத்தில் அமைந்துள்ளது. உடலை வளைத்து, இரு கைகளை உயரேத் தூக்கி கரும்பு வில்லில் மலர் அம்பினைத் தொடுத்த நிலையில் உள்ளான். மதனின் பின்னால் அவனின் தொடுக்கும் வலது கையை தடுத்தபடி உள்ள இரதி தலைவனின் தோள் அளவே உள்ளாள். நீண்ட கூந்தலைக் கொண்டுள்ளாள். முத்தாலான அணிகளை இருவரும் அணிந்துள்ளனர். குந்தளம் தலையலங்காரம், முகத்தில் மீசை, தொப்பை வயிறு என காமவேள் விசய நகர அரச உருவமைதியில் காட்டப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்புதவிகள்
இரதி-மன்மதன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்