சிற்பம்

பூவராகர்

பூவராகர்
சிற்பத்தின் பெயர் பூவராகர்
சிற்பத்தின்அமைவிடம் வைகுண்டப் பெருமாள் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன்
விளக்கம்
நிலமகளை மீட்டெடுத்து தன் மடியில் அமர்த்திய பூவராகர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி (வராகம்) அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியனின் தம்பியான் இரண்யாட்சன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம். பகவான், மூன்றாவது அவதாரம் வராகம்-பன்றி , குடைந்து சென்றது . இது உயிரினங்கள் நீரிலிருந்து முழுவதாக நிலத்தில் வாழ இயைக்கம் அடைந்த நிலையை எடுத்துக்காட்டுகிறது. வைகுண்ட பெருமாள் கோயிலிலுள்ள வராகர் சிற்பம் பெரிதும் சிதைவுபட்டுள்ளது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதாரம் பூமியை கடலுக்கடியில் பாயென சுருட்டி வைத்த அசுரனை அழித்து, தன் கொம்புகளிடையே பூமியை தூக்கி வந்து, நிலமகளை தொடையில் அமர வைத்துள்ள காட்சி. வராகர் பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளில் நிலமகளை அணைத்துள்ளார். இருவரின் முகமும் சிதைந்துள்ளன. இவர்களின் கீழே அசுரன் பயந்த நிலையில் கைகூப்புகிறான். அவனை அவன் மனைவி அணைத்துக் காத்தபடி பயத்துடன் வராகரை பார்க்கிறாள். மேலே கந்தர்வர்கள் இருவர் இக்காட்சியைக் கண்டு போற்றுகின்றனர்.
குறிப்புதவிகள்
பூவராகர்
சிற்பம்

பூவராகர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்