சிற்பம்
துரோணாச்சாரியார்
துரோணாச்சாரியார்
சிற்பத்தின் பெயர் | துரோணாச்சாரியார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
விளக்கம்
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் குருவாய் இருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொடுத்த பிராமண சத்திரியர் துரோணாச்சாரியார்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பல்லவர்களின் குல மரபுப் பட்டியல் விஷ்ணுவிலிருந்து தொடங்குகிறது. விஷ்ணு முதல்வனாகவும், பின் அவர் உந்தியில் உதித்த பிரம்ம தேவனும், பின் பிராமண சத்திரியரான துரோணச்சாரியாரும், பின் துரோணரின் மகனான அசுவத்தாமனும் பல்லவர்களின் முன்னோர்களாக வைகுண்டப் பெருமாள் கோயில் திருச்சுற்று மாளிகையில் உள்ள புடைப்புச் சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளனர். பல்லவர்கள் தங்களை பிராமண சத்திரியர்களாக தங்கள் செப்பேடுகளில் தெரிவிக்கின்றனர். எனவே துரோணரையும், அவர் மகனான அசுவத்தாமனையும் தங்கள் முன்னோர்களாகக் கொண்டு வைகுண்ட பெருமாள் கோயிலில் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அச்சிற்பங்களில் ஒன்றான துரோணாச்சாரியாரின் சிற்பம் இது. துரோணர் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தின் மீது சுகாசனத்தில் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். இடது கையை இடது தொடையில் வைத்தவாறும், வலது கையால் கடக முத்திரை காட்டியவாறும் உள்ளார். ஜடாமகுடம் தரித்து, முப்புரிநூல் அணிந்துள்ளார். தோள்மாலை, தோள்வளை, கடகவளை, முன்வளை, கழுத்தில் சரப்பளி ஆகியன அழகு செய்கின்றன. நீள் காதுகள் தோள்களில் படர்ந்துள்ளன. மேலே இருவர் சாமரம் வீசுகின்றனர். ஒருவர் வாழ்த்தொலிக்கிறார். துரோணரின் ஆசனத்திற்கு கீழே இருவர் ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளனர். போர் வித்தை பற்றிய பாடம் அல்லது போர்முறை உபாயம் பற்றிய ஆலோசனையாய் இருக்கலாம்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
துரோணாச்சாரியார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |