சிற்பம்

பல்லவ மன்னன்

பல்லவ மன்னன்
சிற்பத்தின் பெயர் பல்லவ மன்னன்
சிற்பத்தின்அமைவிடம் வைகுண்டப் பெருமாள் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை அரச உருவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன்
விளக்கம்
அரசன் கோயில் கட்டுவதைப் பற்றி ஆலோசனை செய்து அமர்ந்திருக்கும் காட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பல்லவ மன்னன் ஸ்வஸ்திகாசனத்தில் வீற்றிருக்கிறான். அரசன் தலைக்கு மேலே கொற்றக் குடை காட்டப்பட்டுள்ளது. வலது கையை வலது தொடையில் வைத்தும், இடது கையை கூறும் தொனியிலும் வைத்துள்ளான். தலையில் கிரீடம் போன்ற தலையணி அலங்கரிக்கிறது. நெற்றியில் கண்ணி மாலை திகழ்கிறது. நீள்காதுகளில் குண்டலங்கள் விளங்குகின்றன. கழுத்தில் சரப்பளியும், கண்டிகையும் உள்ளன. மார்பில் யக்ஞோபவீதம் (முப்புரிநூல்) செல்கிறது. மன்னனின் மேற்புறம் இருவர் சாமரத்தை கையில் பிடித்து தோளில் சாய்த்தபடி நிற்கின்றனர். மன்னனின் இடது புறத்தில் பணிவாக வணங்கிய நிலையில் அரசன் கூறுவதை கேட்பவராய் நிற்பவர் அமைச்சராய் இருக்கலாம். அவருக்கு அருகில் ஒருவர் நிற்கிறார். மேலே ஒருவர் வணங்கிய நிலையில் இடைவரை காட்டப்பட்டுள்ளார். இக்காட்சியின் அருகே கோயிலொன்று உள்ளது. கோயிலின் அருகே ஒருவர் நின்றுள்ளார். கோயிலின் கீழே ஸ்வஸ்திகாசனத்தில் இருவர் அமர்ந்திருக்கின்றனர். கோயில் கட்டி முடிப்பதை பற்றிய ஆலோசனையாகவும், அக்கோயிலுக்கு வழங்க வேண்டிய நிவந்தங்களைப் பற்றிய மன்னனின் ஆணையாகவும் இக்காட்சி விளங்குகிறது. இச்சிற்பத் தொகுதியில் காட்டப்படும் அமர்வு நிலை, ஆடையணிகள் ஆகியவற்றைக் காணும் பொழுது பல்லவர் கால சமூகப் பண்பாடு, மரபு நிலை, கலாச்சாரம் நன்கு விளங்குகிறது.
குறிப்புதவிகள்
பல்லவ மன்னன்
சிற்பம்

பல்லவ மன்னன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்