வரலாற்றுச் சின்னம்
திருப்பைஞ்ஞீலி குடை வரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் திருப்பைஞ்ஞீலி குடை வரை
அமைவிடம் திருப்பைஞ்ஞீலி நாதர் கோயில்
ஊர் திருப்பைஞ்ஞீலி
வட்டம் மண்ணச்சநல்லூர்
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
இக்குடைவரை மேற்கு நோக்கிய நிலையில் முகப்பு மண்டபம், அந்தராளம் கருவறை ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. கருவறை சதுர வடிவத்தில் குடையப்பட்டு பின்சுவரில் சோமாஸ்கந்தரின் புடைப்புச்சிற்பம் காணப்படுகிறது. சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பத்தில் சிவன் நான்கு கைகளுடன் காணப்படுகின்றார். பின் வலக்கையில் மானும் இடக்கையில் அக்கமாலையும் பெற்றும் முன்னிரு கைகளில் வலக்கை வியாக்கியமான முத்திரைப் பெற்றும் இடக்கை தொடைமீது இறுத்தியவாறும் காட்சி அளிக்கின்றார். சுகாசனத்தில் அமர்ந்துள்ள இறைவனின் அருகில் உமை அன்னை இரண்டு கைகளுடன் காணப்படுகிறாள். இவ்விருவருக்கும் இடையில் கந்தன் நின்ற நிலையில் உள்ளார். இறைவனின் காலடியில் சிற்பம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. இது முயலகனாக இருக்கலாம். இதனை உள்ளூரில் "யமன்" எனக் கூறுகின்றனர். எனவே இக்குடைவரையும் யமபுரி" எனப்படுகிறது. அதிகார வல்லபர் சன்னதி என்றும் இதனைக் கூறுகின்றனர். இக்குடைவரை இருக்கும் பகுதி பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடைப்பட்ட முத்தரையர் களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருப்பதால் இக்குடைவரை பல்லவர்கீழ் இருந்த முத்தரையர்களின் காலக்குடைவரையாக இருக்கலாம். பல்லவர் குடைவரைகளில் காணப்படும். சோமாஸ் கந்தரின் புடைப்புச்சிற்பம் இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் துடையூர் சிவன் கோயில், திருப்பட்டூர் பிரமபுரீசுவரர் கோயில்
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் 18 கி.மீ. தொலைவில் திருப்பைஞ்சீலி என்னும் ஊர் அமைந்துள்ளது. இவ்வூர் மூவர் முதலிகளான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்கல் பாடல் பெற்ற திருத்தலத்தைக் கொண்டிலங்குகிறது. "பைஞ்சீலி" என்னும் ஒருவகை வாழையைத் தலவிருட்சமாக இங்குள்ள கோயில் பெற்றுள்ளதால் இவ்வூரின் பெயரே "திருப்பைஞ்ஜீலி" எனக் கூறப்படுகிறது. இவ்வூருக்கு அருகில் தான் திருவெள்ளறை வைணவத்தலமும் அமைந்துள்ளது. திருப்பைஞ்சீலியார் சிவாலயம் ஊரின் மையத்தில் மிகப்பெரிய சுற்று மாளிகையைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயிலின் தெற்குப் பகுதியில் திருச்சுற்று மாளிகையின் உள்பகுதியிலேயே தரைமட்டத்தை ஒட்டியவாறு சிறிய பாறை ஒன்று உள்ளது. இப்பாறையில் சிறிய குடைவரை ஒன்று குடையப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
திருப்பைஞ்ஞீலி குடை வரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_MON_00121/TVA_MON_00121_தி...

  • TVA_MON_00121/TVA_MON_00121_தி...

  • TVA_MON_00121/TVA_MON_00121_தி...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 619
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 12

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்