வரலாற்றுச் சின்னம்
உதயகிரிக் கோட்டை
தொல்லியல் சின்னத்தின் பெயர் உதயகிரிக் கோட்டை
அமைவிடம் புலியூர்க்குறிச்சி
ஊர் நாகர்கோயில்
வட்டம் நாகர்கோயில்
மாவட்டம் கன்னியாகுமரி
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.1600
விளக்கம்

          உதயகிரிக் கோட்டை கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் நகரில் இருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கி.பி. 1600 களில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் பத்மநாபபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு திருவிதாங்கூர் அரசர்கள் ஆண்ட காலத்தில் இக் கோட்டை அவர்களுக்குப் பெரிய சொத்தாக அமைந்திருந்தது. இது பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மரால் மீளக் கட்டப்பட்டது.

          90 ஏக்கர் (36 ஹெக்டேர்) பரப்பளவை உள்ளடக்கியுள்ள இக் கோட்டையுள் 200 அடி (79 மீட்டர்) உயரமுள்ள ஒரு குன்று உள்ளது. இதற்குள் துப்பாக்கிகளை வார்ப்பதற்கான வார்ப்பு உலை ஒன்றும் உண்டு.

உதயகிரிக் கோட்டைக்குள் டி லனோயின் என்பவரது கல்லறை காணப்படுகிறது. டச்சு அட்மிரலான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் (Eustachius De Lannoy) மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோரது சமாதிகள் இங்குள்ள அழிந்த நிலையில் காணப்படும் ஒரு கிறிஸ்தவ சிற்றாலயத்துள் உள்ளன. ஒரு காலத்தில் இக் கோட்டை இவரது பெயரைத் தழுவி தில்லானைக் கோட்டை (டி லனோய்ஸ் கோட்டை - De Lennoy's Fort) என அழைக்கப்பட்டு வந்தது. இக்கோட்டை, திருவனந்தபுரம் - நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புலியூர்க்குறிச்சியில் உள்ளது.

          பத்மநாபபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட  திருவிதாங்கூர் அரசர்களின் மிக முக்கியமான படைநிலை இதுவேயாகும். இக்கோட்டை பாரிய கருங்கற்களால் ஒரு தனியான குன்றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது.

பாதுகாக்கும்நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் கன்னியாகுமரி, முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், குளச்சல் துறைமுகம், மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, முக்கடல் அணை, உலக்கை அருவி, சொத்தவிளை கடற்கரை
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொற்கள்
சுருக்கம்

          உதயகிரிக் கோட்டை பத்மநாபபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட  திருவிதாங்கூர் அரசர்களின் மிக முக்கியமான படைநிலையாகும். இக்கோட்டை பாரிய கருங்கற்களால் ஒரு தனியான குன்றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது.

உதயகிரிக் கோட்டை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_MON_00015_உதயகிரி...

  • TVA_MON_00015_உதயகிரி...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 24 Sep 2018
பார்வைகள் 143
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்