Back
வரலாற்றுச் சின்னம்

பழவேற்காடு- டச்சு கல்லறை

பழவேற்காடு- டச்சு கல்லறை
தொல்லியல் சின்னத்தின் பெயர் பழவேற்காடு- டச்சு கல்லறை
அமைவிடம் பழவேற்காடு கோட்டை
ஊர் பழவேற்காடு
வட்டம் பொன்னேரி
மாவட்டம் திருவள்ளுர்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.1636
விளக்கம்
பழவேற்காடு பகுதி ஏரியும், கடலும் அமைந்துள்ள அழகிய கடற்கரை பகுதியாகும் .கல்லறை தோட்டம்:ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் டச்சுக்காரர்கள், பழவேற்காடு கடல் பகுதியில் தங்கி வணிகம் செய்து வந்தனர். அவர்களின் கல்லறைகள், தற்போதும், அங்கு பிரம்மாண்டமாக இருந்து வருகிறது. இங்குள்ள புதிய கல்லறை கி.பி. 1636 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.. இதற்கு முந்தைய கல்லைறையில் போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் இந்தியரும் புதைக்கப்பட்டுள்ளனர். இங்கு 77 கல்லறைகள் உள்ளன அவற்றில் ஐந்திற்கு குவி மாடத்துடன் கட்டுமானம் எழுப்பியுள்ளனர். இங்குள்ள கல்லறைகளில் இறந்தவர் பற்றிய குறிப்புக்களை டச்சு மொழியில் எழுதியுள்ளனர். சில கல்லறைகளில் கலை நயமிக்க வேலைப்பாடுகளும், குறியீடுகளும் காணப்படுகின்றன. இக்கல்லறையின் நுழை வாயிலில் உள்ள இரு தூண் பகுதிகளில் இறப்பை உணர்த்தக்கூரிய மனித எலும்பு சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இக்கல்லறைக்கு இன்றளவும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள டச்சுக்காரர்களின் வாரிசுகள் தங்கள் முன்னோர்களின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாதுகாக்கும்நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் பழவேற்காடு கரிமணல் சடராயேஸ்வரர் கோயில், பழவேற்காடு தர்மராஜா கோயில், ஆலம்பரைக் கோட்டை, பழவேற்காடு ஏரி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
பழவேற்காடு ஒரு சிறிய கடற்கரை கிராமம், இது தமிழக – ஆந்திர எல்லையில் சென்னைக்கு வடக்கே சுமார் 60 கி.மீ. தூரத்தில் வங்க கரையோரம் அமைந்துள்ள சுற்றுலா தலம் ஆகும். போர்ச்சுகீசியர்கள் கி.பி 1502 ஆம் ஆண்டு விஜயநகர் மன்னர்களின் உதவியால் வங்க கரையோரத்தில் உள்ள பழவேற்காட்டில் வர்த்தக மையமும், கோட்டையும் பழவேற்காடு ஏரிக்கரையில் எழுப்பினர். பின்னர், இக்கோட்டை டச்சுக்கார்ர்களால் கி.பி. 1609 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டது. அதன் பின் கி.பி. 1613 ஆம் ஆண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனி ஜெல்ட்ரியா ( Fort Geldria ) எனும் வலுவான கோட்டையை எழுப்பினர். இதுவே இந்தியாவில் கோரமண்டல் கடற்கரையில் டச்சுக்கார்ர்களின் முதல் குடியிருப்பு. இக் கம்பெனியின் பொது இயக்குனர் வெம்மர் வான் பெர்செம் (Wemmer van Berchem) என்பவரின் சொந்த ஊரான ஜெல்ட்ரியாவின் நினைவாக இக்கோட்டைக்கு பெயர் சூட்டப்பட்டது.. வணிகத்துக்காக இக்கோட்டையைக் கைப்பற்ற ஐரோப்பியர்களாகிய போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயருக்குமிடையே போட்டி இருந்தது. இங்குள்ள புதிய கல்லறை கி.பி. 1636 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.. இதற்கு முந்தைய கல்லைறையில் போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் இந்தியரும் புதைக்கப்பட்டுள்ளனர். இங்கு 77 கல்லறைகள் உள்ளன அவற்றில் ஐந்திற்கு குவி மாடத்துடன் கட்டுமானம் எழுப்பியுள்ளனர். இங்குள்ள கல்லறைகளில் இறந்தவர் பற்றிய குறிப்புக்களை டச்சு மொழியில் எழுதியுள்ளனர். சில கல்லறைகளில் கலை நயமிக்க வேலைப்பாடுகளும், குறியீடுகளும் காணப்படுகின்றன. இக்கல்லறையின் நுழை வாயிலில் உள்ள இரு தூண் பகுதிகளில் இறப்பை உணர்த்தக்கூரிய மனித எலும்பு சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இக்கல்லறைக்கு இன்றளவும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள டச்சுக்காரர்களின் வாரிசுகள் தங்கள் முன்னோர்களின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பழவேற்காடு- டச்சு கல்லறை
வரலாற்றுச் சின்னம்

பழவேற்காடு- டச்சு கல்லறை

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_MON_00006_பழவேற்க...

  • TVA_MON_00006_பழவேற்க...

  • TVA_MON_00006_பழவேற்க...

  • TVA_MON_00006_பழவேற்க...

  • TVA_MON_00006_பழவேற்க...

  • TVA_MON_00006_பழவேற்க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Apr 2017
பார்வைகள் 317
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்