சிற்பம்

இலட்சுமி நரசிம்மர்
சிற்பத்தின் பெயர் | இலட்சுமி நரசிம்மர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
பக்தன் பிரகலாதனுக்காக இரணியகசிபுவை அழிக்க விஷ்ணு எடுத்த திருவவதாரமாகிய நரசிம்மர் கோலம்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மனித உடலும் சிங்க முகமும் கொண்டவராய் நரசிம்மர் நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். பின் வலது கை சிதைந்துள்ளது. பின் இடது கையில் திருவாழியினைப் பற்றியுள்ளார். இடது முன் கை தொடையில் ஊரு முத்திரையாக அமைந்துள்ளது. வலது முன் கையை அவர் காலருகே பணிவுடன் வணங்கி நிற்கும் சிறுவன் பிரகலாதனை நோக்கி வரத முத்திரையாகக் கொண்டுள்ளார். இடது புறம் திருமகள் நிற்கிறாள். பட்டுப் பீதாம்பரம் உடுத்தி, கிரீட மகுடமணிந்தவராய், சகலாபரணங்களுடன் காட்சியளிக்கும் நரசிம்மர் தன் சிம்ம வாயைப் பிளந்த வாறு காட்சியளிக்கிறார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |