சிற்பம்

கிளி விடு தூது
சிற்பத்தின் பெயர் | கிளி விடு தூது |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வாழ்வியல் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
கிளி விடு தூது
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
விசயநகரர்-நாயக்கர் காலத்திலேயே சிற்றிலக்கியங்கள் அதிக அளவில் பாடப்பெற்றன. அவற்றுள் ஒன்றான தூது இலக்கியம் குறிப்பிடத்தக்கது. திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்து அருளியுள்ள இறைவன் ஆகிய திருமால் தூது பெறும் தலைவன். அவனிடம் காதல் கொண்ட பெண் ஒருத்தி அவனிடம் ஒரு கிளியைத் தூது அனுப்புகின்றாள். இச்செய்தியைக் கூறுவதே அழகர் கிள்ளை விடு தூது நூல் ஆகும். தலைவி தலைவனைப் பிரிந்து வாடுகிறாள். அவளின் துயரம் போக்க வழியறியாது அவள் தோழியும் தவிக்கின்றாள். இந்நிலையில் அவளுடன் இணை பிரியாது இருக்கும் கிள்ளையை தலைவனிடம் தூது அனுப்ப முடிவு செய்கிறாள். தூது விடும் தலைவி, தூது விடு பொருளாகிய கிளியைப் பார்க்கின்றாள். அதனை அழைக்கின்றாள். கிளியின் பல்வேறு பெருமைகளைக் கூறிக் கிளியின் பெயர்ச் சிறப்பைக் குறிப்பிடுகிறாள். தத்தைக்கு விருப்பமான கனி ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அதனை உண்ணுமாறு கிள்ளை மொழி கூறுகிறாள். தலைவியின் வலது கரத்தில் அமர்ந்துள்ள கிள்ளை தலைவியின் தூது மொழியைக் கேட்டவாறு, அவள் கையில் உள்ள கனியை உண்ண எத்தனிக்கிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |