சிற்பம்
விஷ்ணு
சிற்பத்தின் பெயர் விஷ்ணு
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
காக்கும் கடவுளான விஷ்ணு நின்ற கோலம்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
விஷ்ணு சமபாதத்தில் நின்ற நிலையில் உள்ளார். நான்கு திருக்கைகளுடன் விளங்கும் திருமால், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். வலது முன் கரம் வரத முத்திரையும், இடது முன் கரம், தொடையில் வைத்தவாறு ஊரு முத்திரையும் காட்டுகின்றன. கிரீடமகுடராய், கணுக்கால் வரையிலான நீண்ட பட்டாடையுடுத்தி, சகலவித ஆபரணங்களும் தரித்தவராய், அலங்கார பூசிதராய் திருமால் விளங்குகிறார். விஷ்ணுவின் இருபுறமும் இரு அடியவர்கள் நிற்கின்றனர். அவர்கள் ஆழ்வார்களா அன்றி ஜெய விஜயர்களா என்பதை அறியக் கூடவில்லை.
குறிப்புதவிகள்
விஷ்ணு
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்