Back
சிற்பம்
பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர்
சிற்பத்தின் பெயர் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர்
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை காணும் பேறு பெற்ற இரு முனிவர்கள்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
வியாக்ரபாதர் புலிக்கால் முனிவர் என அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் பூசனைக்குரிய மலை முகடுகளில் ஏறி, மலர்களை பறிப்பதற்கு ஏதுவாக புலிக்கால் வேண்டிப் பெற்றார். வியாக்ரம் என்றால் புலி. பாதம் என்றால் கால். பதஞ்சலி முனிவர் நாக உடலைக் கொண்டவர். பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிஷேடன் அவதாரமாகத் தோன்றியவர். இவ்விரு முனிவர்களும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை என்றென்றும் காணும் அருள் பெற்றவர்கள். தில்லையில் இவ்விரு முனிவர்கள் காணவே சிவபெருமான் ஆனந்த நடம் ஆடினார். இச்சிற்பத்தில் முனிவர்கள் இருவரும் இறைவனின் ஆடலைக் கண்டு, மெய் சிலிர்த்து, அகம் குளிர, முகம் மலர, கரம் கூப்பி நிற்கின்றனர். முனிவர்கள் இருவரும் உருத்திராக்க மாலைகளை கழுத்திலும், கைகளிலும் அணிகளாகக் கொண்டுள்ளனர். முனிவர்களுக்கேயுரிய ஜடாமகுடத்துடனும், தாடி, மீசையுடனும் தோற்றமளிக்கின்றனர். பதஞ்சலி முனிவரின் இடையிலிருந்து சுற்றி நாகம் ஒன்று தலைக்கு மேல் படமெடுத்துள்ளது. வியாக்ரபாதருக்கு புலியின் கால் காட்டப்பட்டுள்ளது. ஒருவர் பின் ஒருவராக நிற்கும் இவர்கள் இறைவனின் ஆடலைக் கண்டு களித்ததன் மூலம் பிறவா நிலை பேறு பெற்றனர்.
குறிப்புதவிகள்
பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 18
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்