சிற்பம்
யானைக் கூட்டம்
யானைக் கூட்டம்
சிற்பத்தின் பெயர் | யானைக் கூட்டம் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | விலங்கு உருவங்கள் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் யானைக் கூட்டம்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
யானைகள் தன் குழவிகளோடு ஓடி வரும் கவின்மிகு காட்சி. தாய்க் களிற்றின் கால்களுக்குள் ஓடியோடி புகுந்து கொண்டு, தன் தாயை ஒட்டியே நடந்து கொண்டு, இங்குமங்குமாக ஓடியாடும் யானைக் குட்டிகள் உயிரோட்டமுள்ளவைகளாக இச்சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ளன. பெரிய வடிவத்திலிருக்கும் யானையின் வயிற்றுக்கடியில் மூன்று குட்டிகளும், முன்னங்காலுக்கு அருகே ஒரு குட்டியும் காட்டப்பட்டுள்ளன. ஒரு குட்டி யானை தவழ்ந்து கொண்டு நீரினைப் பருகுகிறது. இதற்கு பின்னால் ஓடி வரும் மற்றொரு யானையின் கால்களுக்கிடையே இரு யானைக்கன்றுகள் உள்ளன. அதில் ஒன்று தவழ்ந்தபடி நீரை தன் சிறிய துதிக்கையால் உறிஞ்சுகிறது. இதற்கும் பின்னால் இரண்டு யானைக் குட்டிகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று தவழ்ந்த நிலையில் உள்ளது. மற்றொன்று அதன் மேல் பாய்ந்தபடி தலையை நீட்டிப் பார்க்கிறது. உயிர்க்குலம் தழைக்க நிலம் நோக்கி வந்த கங்கையின் நீரால் தாகந்தீர்ந்த பிடிகளும், அதன் பிஞ்சுகளும் கலைத் தாகத்தை நம்முள் தூண்டி விடுகின்றன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
யானைக் கூட்டம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 18 |
பிடித்தவை | 0 |