சிற்பம்
வராகமூர்த்தி
வராகமூர்த்தி
சிற்பத்தின் பெயர் | வராகமூர்த்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
நிலமகளை மீட்டெடுத்து தன் மடியில் அமர்த்திய பூவராகர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திருமாலின் பத்து அவதாரங்களுள் வராக அவதாரம் மூன்றாவதாகும். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியனின் தம்பியான இரண்யாட்சன் என்ற அசுரனுடன் போர்செய்து வென்று நிலமகளை மீட்டெடுத்து தன் மடியில் இருத்தினார் என்கிறது வராக புராணம். இக்காட்சி மாமல்லையில் சிற்பமாக்கப்பட்டுள்ளது. கேழல் முகத்தினை உடைய வராகமூர்த்தி, இடது காலை ஊன்றி, வலது காலை உயர்த்தி ஆதிசேடனின் தலை மேல் வைத்துள்ளார். உயர்த்திய வலது காலின் தொடை மேல் நில மகளை இருத்தியுள்ளார். நான்கு திருக்கைகளைக் கொண்ட வராகர் முன் வலது கையால் தேவியின் பிருஷ்டத்தை அணைத்துள்ளார். இடது முன் கை தேவியின் காலை ஆதூரமாகப் பற்றியுள்ளது. பின்னிரு கைகளில் எறிநிலை சக்கரம், சங்கு ஏந்தியுள்ளார். ,ரத்தின மகுடந்தரித்துள்ள வராகர், கழுத்தில் கண்டிகையும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் தோள்வளைகளும், முன்வளைகளும் அணிந்துள்ளார். இடையில் இடைக்கட்டுடன் கூடிய அரையாடை தெரிகின்றது. கேழல் முகம் நிலமகளின் வல மார்பினை உரசுகிறது. நாணமுடன் வராகரை ஏறிட்டுப் பார்க்கும் தேவி கரண்ட மகுடம் அணிந்துள்ளார். கைகளில் தோள்வளை, முன்வளைகள், கால்களில் சதங்கைகள் ஆகியன அழகு செய்ய இடைக்கட்டின் பகுதி தொடையின் வழி கீழே விழுமாறு அமர்ந்துள்ளாள். வராகமூர்த்தியின் வலது காலின் கீழே கடல் அலைகளுக்கு நடுவே ஐந்து தலைகளுடன் ஆதிசேடன் என்னும் நாக-மனித உருவம் காட்டப்பட்டுள்ளது. ஆதிசேடன் கைகளைக் கூப்பி வணங்குகிறான். அருகே அவன் மனைவி நாகராணி வணங்கி நிற்கிறாள். அருகே முனிவர் ஒருவர் நிற்கிறார். மேலே ஒளி வட்டத்துடன் சூரியன் இக்காட்சியைக் கண்டு வணங்குகிறான். வராகரின் இடதுபுறம் உலகப் படைப்புக் கடவுளான நான்முகன் நான்கு திருக்கரங்களுடன் விளங்குகிறார். இடது கீழ்க்கரத்தில் கமண்டலத்தைத் தாங்கியுள்ளார். இடது மேற்கை ஏந்தல் கையாக உள்ளது. வலது பின்கை இடையில் வைத்தவாறு கடி முத்திரையாகவும், வலது முன்கை கடக முத்திரையாகவும் அமைந்துள்ளன. கணுக்கால் வரையிலான நீண்ட ஆடையை கால்களுக்கு இடையே குறுக்காக மடித்துக் கட்டியுள்ளார். இடைக்கட்டு அமைந்துள்ளது. மார்பில் முப்புரிநூல், கழுத்தில் கண்டிகை, வலது தோளில் மேலாடையின் முத்தானை, கைகளில வளைகள் ஆகியவை விளங்குகின்றன. நான்முகன் நேர்முகமாக நிற்கிறார். அவருக்கு அருகில் நிற்கும் நாரதமுனிவர் பின்புறமாகக் காட்டப்பட்டுள்ளார். நான்முகனுக்கு மேலே இந்திரன் இக்காட்சியைக் காண்கிறான்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
வராகமூர்த்தி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |