சிற்பம்

தேவி

தேவி
சிற்பத்தின் பெயர் தேவி
சிற்பத்தின்அமைவிடம் கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம்
ஊர் கங்கை கொண்ட சோழபுரம்
வட்டம் ஜெயங்கொண்டம்
மாவட்டம் அரியலூர்
அமைவிடத்தின் பெயர் கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம்
சிற்பத்தின் வகை தாய்த்தெய்வ சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

நின்ற நிலையில் உள்ள பெண் தெய்வ சிற்பம். உடனுறை தேவியாய் இருக்கலாம். இடது கையில் மலரைப் பிடித்துள்ளாள். கணுக்கால் வரையிலான நீண்ட மடிப்புகளுடன் கூடிய ஆடை அணிந்து, கரண்ட மகுடத்துடன், காதுகளில் பத்ரகுண்டலங்கள் விளங்க, சரப்பளி, கண்டிகை கழுத்தில் துலங்க, மார்பில் குஜபந்தத்துடனும் முப்புரி நூலுடனும் காட்சியளிக்கிறாள்.

ஒளிப்படம்எடுத்தவர் க.த. காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

பெண் தெய்வம் ஒன்றின் சிற்பம் நின்ற நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் பெயர் இன்னதென்று அறியக்கூடவில்லை. வலது கையில் மலரை பிடித்தவாறு நிற்கிறாள் தேவி. இரு துணைவியர் கொண்ட இறைவனின் வலப்பக்கம் உள்ள தேவியாய் இருக்கலாம்.

தேவி
சிற்பம்

தேவி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 30 Aug 2022
பார்வைகள் 186
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்