சிற்பம்

முருகன்

முருகன்
சிற்பத்தின் பெயர் முருகன்
சிற்பத்தின்அமைவிடம் கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம்
ஊர் கங்கை கொண்ட சோழபுரம்
வட்டம் ஜெயங்கொண்டம்
மாவட்டம் அரியலூர்
அமைவிடத்தின் பெயர் கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

முருகன் மயில் வாகனத்துடன் நின்ற நிலையில் காணப்படுகின்றார். கண்ணிமாலையும் கரண்டமகுடமும் தலையலங்காரமாய் விளங்க, கழுத்தணிகளில் கண்டசரம், சரப்பளி துலங்க, மார்பில் சன்னவீரம், வயிற்றில் உதரபந்தம் ஆகியன பொலிந்திட, நான்கு கரங்களில் முன் வலது கையை காக்கும் கரமாகக் கொண்டுள்ளார். இடது முன்கை சிதைந்துள்ளது. பின்னிரு கைகளில் சக்திப்படையும், வச்சிராயுதமும் கொண்டுள்ளார். அண்ணல் சமபாதத்தில் நின்றிருக்க அவரின் வாகனம் மயில் பின்புறம் காட்டப்பட்டுள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் க.த. காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

முருகன் நின்ற நிலை கோலம். மயில் வாகனம் பின்னே காட்டப்பட்டுள்ளது. நான்கு திருக்கைகளுடன் விளங்கும் இறைவன் சக்திப்படையும், வச்சிராயுதமும் கொண்டு, அபயம் காட்டுகிறார்.

முருகன்
சிற்பம்

முருகன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 30 Aug 2022
பார்வைகள் 42
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்