இராமர்
| சிற்பத்தின் பெயர் | இராமர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| ஊர் | எழும்பூர் |
| வட்டம் | அமைந்தகரை |
| மாவட்டம் | சென்னை |
| அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
| சிற்பத்தின் வகை | வைணவம் |
| ஆக்கப்பொருள் | உலோகம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
|
விளக்கம்
இராமரின் படிமம் கோதண்டராமராய் காட்டப்பட்டுள்ளார். கிரீட மகுடம் அணிந்து திரிபங்க நிலையில், பத்மபீடத்தின் மீது நிற்கும் இராமர் இரு கைகளுடன் காட்டப்பட்டுள்ளார். கைகள் இரண்டும் வில்லும் அம்பும் தாங்கிய நிலைக்கான முத்திரைகள் காட்டப்பட்டுள்ளன. நீள் செவிகளில் மகர குண்டலங்கள் அணி செய்ய, கழுத்தில் ஆரணிகளும், மார்பில் முப்புரிநூல், வயிற்றில் உதரபந்தம், இடையாடை அரையாடையாகவும் கொண்டு, சோழர்கால உருவமைதியுடன் விளங்குகிறார். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இராமாயணத்தின் நாயகரான இராமரின் திருக்கோலம் செப்புத் திருமேனிகளாக சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு, உலாப்படிமங்களாக வலம் வந்தன. |
|
| ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Sep 2018 |
| பார்வைகள் | 51 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |