
நடராஜர்
சிற்பத்தின் பெயர் | நடராஜர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | குலசேகரநல்லூர் |
வட்டம் | திருப்பனந்தாள் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
விளக்கம்
ஆடல்வல்லானின் செப்புத் திருமேனி சோழர் காலத்து படிமக்கலையாகும். உலகப்புகழ் பெற்ற ஆடல்வல்லானின் இத்திருமேனி அதன் வடிவமைப்புக்கு ஏதும் இணையற்றது. நடராசரின் ஆடற் திருக்கோலத்தில் காட்டப்பட்டுள்ள ஆடையணிகளும், தலைக்கோலமும் எழிற்வாய்ந்தவை. ஐம்பூத தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆடல்வல்லான் படிமம் தனித்துவம் வாய்ந்தது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சிவபெருமானின் பல்வேறு வடிவங்களுள் நடராஜர் என்னும் ஆடல்வல்லான் வடிவம் சிறப்பு வாய்ந்தது. நடராசர் என்ற சொல்லானது நட + ராசர் என பகுந்து நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. நடராசர், நடராஜா, நடேசன், நடராசப் பெருமான், கூத்தன், சபாபதி, சபேசன், ஆடல்வல்லான் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். சோழர்கள் காலத்தில் முதன்மைப் படுத்தப்பட்ட ஆடல்வல்லான் சிற்பங்கள் கலைத்திறனுடனும், எழிலுடனும், தத்துவ விளக்கங்களுடனும் உருவாக்கப்பட்டு வழிபடப்பட்டன. |
|
ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Sep 2018 |
பார்வைகள் | 22 |
பிடித்தவை | 0 |