சிற்பம்
பத்ரகாளி
சிற்பத்தின் பெயர் பத்ரகாளி
சிற்பத்தின்அமைவிடம் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
ஊர் எழும்பூர்
வட்டம் எழும்பூர்
மாவட்டம் சென்னை
அமைவிடத்தின் பெயர் அரசு மைய அருங்காட்சியகம், சென்னை
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் உலோகம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.14-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர்
அளவுகள் / எடை உயரம் 48 செ.மீ.
விளக்கம்

          பத்ரகாளி வீராசன அமர்வில் பீடத்தின் மீது அமர்ந்துள்ளாள். நாலிரு புயங்களோடு விளங்கும் தேவி எட்டுக் கைகளில் சங்கு, சக்கரம்,உடுக்கை, பாசம், வாள், கேடயம், முத்தலை சூலம், கபாலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளாள். தீச்சுடர் தலைக்கோலம் விளங்கிட, பிறவணிகளும் பூண்டு, கணுக்கால் வரையிலான முழுநீள ஆடை அணிந்து அமைதியான தோற்றப் பொலிவினைப் பெற்று விளங்குவது சிறப்பு.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

          சக்தி வழிபாட்டில் மிக முக்கிய தெய்வமாக விளங்கிடும் காளி தேவி பண்டைய தாய்த் தெய்வ வழிபாட்டின் குறியீடு ஆவாள். பத்ரகாளி என்பவள் தேவியின் அகோர வடிவம் பெற்றவள்.

குறிப்புதவிகள்
பத்ரகாளி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Jul 2018
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்