சண்டிகேசுவரர்
| சிற்பத்தின் பெயர் | சண்டிகேசுவரர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| ஊர் | திருவெண்காடு |
| வட்டம் | மயிலாடுதுறை |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | உலோகம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
| அளவுகள் / எடை | உயரம் 66 செ.மீ. |
|
விளக்கம்
சண்டேசர் சிவபெருமானின் அருள் பெற்ற நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். அணுக்கத் தொண்டரான சண்டேசர் பீடத்தின் மீது சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது கையில் மழுவாயுதத்தை ஏந்தியபடியும், இடது கை அபய முத்திரை காட்டியபடியும் அமைதி தவழும் முகத்துடன் அமர்ந்துள்ளார். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சண்டேசர் சிவபெருமானின் அருள் பெற்ற நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். அனைத்து சிவ ஆலயங்களிலும் வடபுற கருவறைத் திருச்சுற்றில் சண்டேசர் அமர்ந்திருப்பார். அணுக்கத் தொண்டரான சண்டேசர் சிவன் கோயில்களின் கணக்காளராகவும், நிர்வாகத்தின் பொறுப்பாளராகவும் கருதப்பட்டு சண்டேச விலையாக கோயிலுக்கு நிலங்கள் விற்கப்பட்டும், வாங்கப்பட்டும் வந்தமையை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. |
|
|
குறிப்புதவிகள்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Jul 2018 |
| பார்வைகள் | 22 |
| பிடித்தவை | 0 |