சிற்பம்
பைரவர்
சிற்பத்தின் பெயர் பைரவர்
சிற்பத்தின்அமைவிடம் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
ஊர் எழும்பூர்
வட்டம் அமைந்தகரை
மாவட்டம் சென்னை
அமைவிடத்தின் பெயர் அரசு மைய அருங்காட்சியகம், சென்னை
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் உலோகம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர்
அளவுகள் / எடை உயரம் 90 செ.மீ.
விளக்கம்

          எண் திருக்கைகளைக் கொண்டு சமபாதத்தில் பீடத்தின் மீது நிற்கும் பைரவர் ஜடாபாரத்து தலைக்கோலத்தை தீச்சுடர் கேசமாகக் கொண்டுள்ளார். நெற்றியில் கண் விளங்க, புருவங்களை நெரித்து, கண்களை வெருட்டிய நிலையில், ஆனால் அகோரமற்ற பாவனையில் நிற்கிறார். செவிகளில் பத்ரகுண்டலம் அழகு செய்கின்றன. திசைகளையே ஆடைகளாகக் கொண்ட திகம்பரராய் பாதங்களில் சதங்கைகள் அணி செய்ய, இடையில் இரு நாகங்களை பிணைத்து இடைக்கச்சாகக் கட்டி, கையணிகளும் நாகபூஷணங்களாக விளங்கிட, மார்பின் குறுக்கே  செல்லும் முப்புரி நூலோடும், வயிற்றில் உதரபந்தத்தோடும். நாலிரு கரங்களில் மணிகளும், கபாலமும் ஏந்தியும்,  கடக முத்திரைகளைக் காட்டியபடியும் நிற்கிறார். முண்டமாலை உடலைச் சுற்றிச் செல்கிறது.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

          பைரவர் வடிவம் சிவ வடிவங்களில் அகோர வடிவங்களில் ஒன்று. பைரவர் சேத்திரபாலர் என்ற பெயர் பெற்றவர். சிவத்தலங்களின் காவலராக கருதப்படுபவர். காலபைரவர் காளாமுக சைவத்தின் முதன்மைக் கடவுள் ஆவார்.

ஆவண இருப்பிடம் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
குறிப்புதவிகள்
பைரவர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 02 Aug 2018
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்