சிற்பம்
ரிஷபவாகன தேவர்
சிற்பத்தின் பெயர் ரிஷபவாகன தேவர்
சிற்பத்தின்அமைவிடம் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
ஊர் எழும்பூர்
வட்டம் அமைந்தகரை
மாவட்டம் சென்னை
அமைவிடத்தின் பெயர் அரசு மைய அருங்காட்சியகம், சென்னை
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் உலோகம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர்
அளவுகள் / எடை உயரம் 106.5 செ.மீ.
விளக்கம்

           சிவ வடிவங்களுள் ஒன்றான ரிஷபவாகன தேவர் இரண்டு கைகளுடன் காட்டப்படும் மானுடவியல் வடிவமாகும். ரிஷப வாகன தேவர் ஒரு விவசாயி போன்ற வடிவம் கொண்டுள்ளார். காளை வாகனத்தில் தன் வலது கையை ஊன்றிய படி, ஜடாமகுடத்தை தலைப்பாகையாக மாற்றியபடி காட்டப்பட்டுள்ளார்.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

        சிவபெருமானின் 64 சிவ வடிவங்களின் குறிப்பிடத்தக்கவைகளுள் ஒன்றான வடிவம் ரிஷபவாகன தேவர். பல்வேறுபட்ட சிவ வடிவங்களுள் சில குறிப்பிட்ட வடிவங்களை மட்டுமே தமிழகப் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்ப ஏற்றுக்கொண்டு சோழர்கள் காலத்தில் வழிபாட்டிற்கு உரியவைகளாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றான ரிஷபவாகன தேவர் திருமேனியும் ஒன்று. விவசாயி போன்ற தோற்றமுடையவராக காட்சியளிக்கும் இவ்வடிவம் வேளாண் சமூகமான தமிழ் நிலத்திற்கு உகந்ததாக இருந்தமையால் சோழ மன்னர்களால் இத்திருமேனி அதிக எண்ணிக்கையில் கோயில்களுக்கு செய்தளிக்கப்பட்டிருந்தன.

ஆவண இருப்பிடம் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
குறிப்புதவிகள்
ரிஷபவாகன தேவர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 02 Aug 2018
பார்வைகள் 17
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்