
மாணிக்கவாசகர்
சிற்பத்தின் பெயர் | மாணிக்கவாசகர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | செட்டிப்புலம் |
வட்டம் | திருத்துறைப்பூண்டி |
மாவட்டம் | திருவாரூர் |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
அளவுகள் / எடை | உயரம் 59 செ.மீ. |
விளக்கம்
பீடத்தின் மீது நின்ற நிலையில் மாணிக்கவாசகர் காட்டப்பட்டுள்ளார். தென்னவன் பிரம்மாதிராயரான திருவாதவூரடிகள் திருவாசகத்தை எழுதியவர். வலது கை சின்முத்திரை காட்டவும், இடது கையில் திருவாசகத்தை ஏந்தியபடியும் உள்ளார். அரையாடை இடையில் இடைவார் கச்சை இறுக்கியுள்ளது. கழுத்தில் நீண்ட முத்தாரம், மார்பில் முப்புரி நூல், தலையில் பாகை என்று தோற்றப் பொலிவுடன் அமைந்துள்ளார். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் ஆமாத்திய பிராமண குலத்தில் சம்புபாதாசிரியர் - சிவஞானவதி என்னும் பெற்றோர்களுக்கு அருமகவாக அவதரித்தார். இயற்பெயர் திருவாதவூரர். இவர் அரிமர்த்தன பாண்டியன் அவையில் ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டம் வழங்கப் பெற்று முதலமைச்சராக இருந்தவர். திருவாசகம், சிவபுராணம் இவற்றை இயற்றியவர். |
|
ஆவண இருப்பிடம் | மாணிக்கவாசகர் |
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 31 Jul 2018 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |