சோமாஸ்கந்தர்
| சிற்பத்தின் பெயர் | சோமாஸ்கந்தர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| ஊர் | திருவாலங்காடு |
| வட்டம் | திருத்தணி |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | உலோகம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| அளவுகள் / எடை | உயரம் 27 செ.மீ. |
|
விளக்கம்
அமர்ந்த நிலையில் விளங்கும் சோமாஸ்கந்தர் செப்புத் திருமேனியில் சிவன் மற்றும் உமையின் நடுவில் காட்டப்படும் பீடத்தின் மேல் சிவனார் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். ஜடாமகுடம் தரித்துள்ளார். நீள் காதுகளில் மகரகுண்டலங்கள் திகழ்கின்றன. கழுத்தில் கண்டிகை விளங்குகின்றது. முப்புரிநூல் மார்பில் உடலின் பின்புறம் செல்கிறது. கேயூரம், முன்வளைகள் அணியப்பட்டுள்ளன. நான்கு திருக்கைகளில் வலது பின்கையில் இன்னதென்று அறியக்கூட வில்லை. முன்னிரு கைகளில் இடது கை யோகமுத்திரையாகவும், வலது முன்கை பிடி முத்திரையிலும் உள்ளன. உமையின் அமர்வு எழில் மிகுந்தது. உடலை இறைவன் அமர்ந்திருக்கும் பக்கம் திருப்பியும், முகம் பக்கவாட்டிலும் காட்டப்பட்டுள்ளது. வலது தொடையில் குழந்தை முருகனை இருத்தி, இடது காலை தொங்கவிட்டு இடது கையை ஊன்றிய நிலையிலும் தேவி கரண்டமகுடம் அணிந்துள்ளார். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இறைவனும் இறைவியும் குழந்தை முருகனுடன் அமர்ந்திருக்கும் கோலம். சிவக்குடும்பக்காட்சி. |
|
|
குறிப்புதவிகள்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Jul 2018 |
| பார்வைகள் | 27 |
| பிடித்தவை | 0 |