
சுப்பிரமணியர்
சிற்பத்தின் பெயர் | சுப்பிரமணியர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
வட்டம் | ஜெயங்கொண்டம் |
மாவட்டம் | அரியலூர் |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
அளவுகள் / எடை | உயரம் 3.5 |
விளக்கம்
பத்மபீடத்தின் சமபாதத்தில் நின்ற நிலையில் சுப்ரமணியர் காட்டப்பட்டுள்ளார். முகப்புடன் கூடிய கரண்ட மகுடம் தலையணியாக விளங்கிட, நெற்றியில் கண்ணி மாலை அணி செய்ய, நான்கு கைகளில் கீழிரு கைகளில் வாளும், கேடயமும் கொண்டு, மேல் வலது கையில் குறுவாளும், இடது கையில் சேவற் கோழியையும் கொண்டுள்ளார். கழுத்தில் நான்கு வகையான ஆரங்கள் அழகு செய்கின்றன. மார்பில் யக்ஞோபவீதம், வயிற்றில் உதரபந்தம், கைகளில் கடகவளை, முன் வளைகள் விளங்குகின்றன. கணுக்கால் வரை நீண்ட உடையணிந்து, ஆடையின் முடிச்சுகள் இடையின் பின்புறம் இருபுறமும் காட்டப்பட்டுள்ளது. போர்க்கடவுளான முருகப் பெருமானைப் போன்று கங்கை கொண்ட சோழனும் சிறந்த சேனைகளின் தலைவனாய் இருந்து சோழப்பேரரசை பரந்து விரியச் செய்தவன். ஆதலால் இந்த முருகக் கடவுளின் வடிவத்தில் இராஜேந்திர சோழன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தமை தெரிகிறது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தேவ சேனைகளின் தலைவனான முருகப் பெருமான் போர்க்கடவுள் ஆவார். சுப்ரமண்யர், முருகன், கார்த்திகேயன் போன்ற பல பெயர்களைப் பெற்ற முருகப் பெருமான் போர்க்கோலத்தில் நிற்கும் காட்சி. |
|
ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 02 Aug 2018 |
பார்வைகள் | 19 |
பிடித்தவை | 0 |