சிற்பம்

கணேசர்
சிற்பத்தின் பெயர் | கணேசர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | வண்டுவாஞ்சேரி |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | கணாதிபத்யம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
அளவுகள் / எடை | உயரம் 42 செ.மீ. |
விளக்கம்
கணபதி நின்ற நிலையில் உள்ளார். கரண்ட மகுடம் தலையில் அலங்கரிக்க, நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். அங்குசம், பாசம் முதலிய கருவிகள் மேலிரு கரங்களில் பிடித்துள்ளார். முன் வலது கையில் ஒசித்த கொம்பையும், இடது உள்ளங்கையில் மோதகத்தை வைத்துள்ளார். குறள் வடிவத்தினரான கணபதி எழிலாக நின்றுள்ளார். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கணேசர் என்ற கணபதி வழிபாடு தமிழகத்தில் கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்து வருகிறது. சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் மகனாகக் கருதப்படுபவர் கணபதி. |
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Jul 2018 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |