
தீர்த்தங்கரர்
சிற்பத்தின் பெயர் | தீர்த்தங்கரர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | சிங்கன்குப்பம் |
வட்டம் | திண்டிவனம் |
மாவட்டம் | விழுப்புரம் |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | சமணம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.13-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர் |
அளவுகள் / எடை | உயரம் 54.5 செ.மீ. |
விளக்கம்
சமணத் தீர்த்தங்கரருள் ஒருவர் திசைகளையே ஆடையாகக் கொண்டவராய், திகம்பரராய் பத்ராசனத்தின் மீது அமைந்த தாமரைப் பீடத்தின் மீது சமபாதத்தில் காயோத்சர்க்கம் ஸ்தானகத்தில் நிற்கிறார். நீள் செவிகள் உடையவராய் விளங்கும் தீர்த்தங்கரரின் தலையில் சிறு சிறு சுருள் முடிகள் (சிரஸ்திரகம்) காட்டப்பட்டுள்ளன. சமண முனிவர் நிற்கும் பீடத்தின் பின்புறம் தமிழ்க் கல்வெட்டு வாசகம் காணப்படுகின்றது. “நாயனார் அதிபதி அழகர்“ வக்கரம் கிழார்“ என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சமணக் கோயில்களில், மடாலயங்களில் சமணத் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் கி.பி.எட்டாம் நூற்றாண்டு தொடக்கம் வழிபாட்டிற்கு வந்தன. சமணத் தீர்த்தங்கரர்களின் செப்புத்திருமேனிகள் வீதி வலம் செய்யவும், அபிடேக வழிபாட்டிற்காகவும் செய்தளிக்கப்பட்டன. நடுநாட்டுப் பகுதியில் சமணம் தழைத்தோங்கியிருந்தது. செஞ்சி, மேல்சித்தாமூர், வளத்தி போன்ற பகுதிகளில் சமண மடங்கள் தற்போதும் செயல்பட்டு வருகின்றன. அப்பகுதிகளில் கிடைத்துள்ள சமணத் தீர்த்தங்கரர்களின் செப்புத் திருமேனிகள் சோழர்காலத்திய கலைப்பாணியை உடையவையாகத் திகழ்கின்றன. |
|
ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 02 Aug 2018 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |