
பிட்சாடனர்
சிற்பத்தின் பெயர் | பிட்சாடனர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | எழும்பூர் |
வட்டம் | அமைந்தகரை |
மாவட்டம் | சென்னை |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
அளவுகள் / எடை | உயரம் 90 செ.மீ. |
விளக்கம்
வட்டணை படவந்த நாதராக பிச்சதேவர், கனமான பாதுகைகளை கால்களில் அணிந்தவராய், நாற்கரங்களோடு, மானுக்கு உணவூட்டியபடி, இடையில் நாகத்தினை கச்சையாகக் கட்டிய திகம்பரராய், பின்புறம் விரிந்த சடையில் இடதுபுறம் மதியையும்,வலதுபுறம் அரவத்தையும், உச்சி முகப்பில் கபாலத்தினையும் கொண்ட முக்கண்ணராய், இடது நீள்செவியில் பத்ரகுண்டலம் விளங்கிட, கழுத்து, கைகளில் அணிகள் துலங்கிட, நக்கன் நனி நாகரிகத்தனாய் நடக்கின்ற நளினக்காட்சி. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சிவபெருமானின் 64 சிவ வடிவங்களின் குறிப்பிடத்தக்கவைகளுள் ஒன்றான வடிவம் பிட்சாடனமூர்த்தி. தாருகாவனத்து முனிவர்களின் செருக்கினை அடக்கும் பொருட்டு, பிச்சையேற்கும் பெருமானாக வேடமேற்று, நக்கனாய் நடந்தவர் சோழப் பெண்களின் நெஞ்சங்களிலெல்லாம் நீங்கா இடம் பெற்றவர். |
|
ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 02 Aug 2018 |
பார்வைகள் | 21 |
பிடித்தவை | 0 |