
புத்தர்
சிற்பத்தின் பெயர் | புத்தர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | நாகப்பட்டினம் |
வட்டம் | நாகப்பட்டினம் |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
சிற்பத்தின் வகை | பௌத்தம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
அளவுகள் / எடை | உயரம் 73 செ.மீ. |
விளக்கம்
புத்த பகவான் தாமரைப் பீடத்தின் மீது சமபாதத்தில் நின்றுள்ளார். கைகள் வரத, அபய முத்திரைகளுடன் விளங்குகின்றன. கணுக்கால் வரை நீண்ட ஆடை அணிந்துள்ளார். நீள் தொள்ளைக் காதுகள் அணிகளற்று காட்டப்பட்டுள்ளன. சிரத்தின் உச்சியில் தாமரை மொட்டு போன்ற அமைப்பு சிரஸ்திக தலையலங்காரத்துடன் காட்டப்பட்டுள்ளது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தமிழகத்தின் பௌத்த மையங்களுள் குறிப்பிடத்தக்க இடமான நாகப்பட்டினத்தில் கிடைத்த புத்தர் செப்புத் திருமேனி இதுவாகும். முதலாம் இராஜராஜன் காலத்தில் நாகப்பட்டினத்தில் ஆனைமங்கலம் என்ற ஊரில் அமைந்திருந்த பௌத்த விகாரைக்கு அவன் அளித்த கொடையைப் பற்றி ஆனைமங்கலம் செப்பேடுகள் கூறுகின்றன. |
|
ஆவண இருப்பிடம் | நாகப்பட்டினம் |
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 31 Jul 2018 |
பார்வைகள் | 18 |
பிடித்தவை | 0 |