அர்த்தநாரீஸ்வரர்
| சிற்பத்தின் பெயர் | அர்த்தநாரீஸ்வரர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| ஊர் | திருவெண்காடு |
| வட்டம் | மயிலாடுதுறை |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
| சிற்பத்தின் வகை | அர்த்தநாரீஸ்வரர் |
| ஆக்கப்பொருள் | உலோகம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / சோழர் |
| அளவுகள் / எடை | உயரம் 102 செ.மீ. |
|
விளக்கம்
அம்மையப்பராய் விளங்கும் மாதொரு பாகர் இடதுபுறம் உமையைக் கொண்டவர். வலதுபுறம் இரு கைகளையும், வாமபாகத்தில் மலரினைப் பிடித்த முத்திரையுடன் விளங்கும் ஒரு திருக்கையும், வலபாகத்தில் முன்கை நந்தியின் மேல் முழங்கையை ஊன்றியது போலக் காட்டப்பட்டுள்ளது. பின் வலது கையில் மழுவினைப் பிடித்துள்ளார். மாதொரு பாகரின் ஆண்பாக, பெண்பாக ஆடை, அணிகலன்கள் வெகு நேர்த்தியாகப் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது. தாமரைப் பீடத்தின் மேல் உமையொரு பாகர் திரிபங்கத்தில் நின்றுள்ளார். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சிவ வடிவங்களுள் ஒன்றான சிவனும் உமையும் இணைந்து மாதொரு பாகராய் விளங்கும் அர்த்தநாரீசுவரர் திருவுருவம் ஆண் பெண் இணைந்த சக்தியை உலகுக்கு உணர்த்துவதாக அமைவது. |
|
|
குறிப்புதவிகள்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Jul 2018 |
| பார்வைகள் | 23 |
| பிடித்தவை | 0 |