
கிருஷ்ணர், சத்தியபாமா மற்றும் ருக்மிணி
சிற்பத்தின் பெயர் | கிருஷ்ணர், சத்தியபாமா மற்றும் ருக்மிணி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | எழும்பூர் |
வட்டம் | அமைந்தகரை |
மாவட்டம் | சென்னை |
அமைவிடத்தின் பெயர் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
விளக்கம்
கோபாலனாகிய கண்ணனின் திருக்கோலத்தில் இராஜகோபாலர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோலத்தில் கிருஷ்ணரின் இருபுறமும் ருக்மிணி, சத்தியபாமையுடன் நிற்கின்றனர். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தாமரைப்பீடத்தின் மீது திரிபங்க நிலையில் கிருஷ்ணர் இராசகோபாலராய் தோற்றங்கொண்டு நின்றுள்ளார். கிரீட மகுடம் தலையை அணி செய்கிறது. நீள் செவிகளில் மகரகுண்டலங்கள் விளங்குகின்றன. வலது கையில் ஆநிரை மேய்க்க உதவும் கோல் ஒன்றைப் பிடிக்கும் பாவனையில் முத்திரை காட்டப்பட்டுள்ளது. இடது கை அருகில் நிற்கும் ஆவின் தலையில் தாங்கலாக வைத்திருக்கும் வகையாக அமைந்துள்ளது. இவரின் வலதுபுறம் நிற்கும் ருக்மிணி இரு கைகளுடன் காட்டப்பட்டுள்ளாள். வலது கரம் தளிர்க்கையாக எழிலுடன் விளங்க, இடது கை மலரைப் பிடிக்கும் கடக முத்திரை காட்டுகிறது. சத்தியபாமா கோபாலரின் இடது புறம் நிற்கிறாள். ருக்மிணியைப் போன்றே ஆடையணிகளும், குந்தளம் தலையலங்காரம் கொண்டும் காணப்படுகிறாள். இடது கரம் தளிர்க்கையாக எழிலுடன் விளங்க, வலது கை மலரைப் பிடிக்கும் கடக முத்திரை காட்டுகிறது. |
|
ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Sep 2018 |
பார்வைகள் | 21 |
பிடித்தவை | 0 |